
செய்திகள் மலேசியா
குறைந்து வரும் வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்க வாசிப்பை நேசிப்போம் திட்டம் மகத்தான முயற்சி: டத்தோ அன்புமணி பாலன்
கோலாலம்பூர்:
குறைந்து வரும் வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்க வாசிப்பை நேசிப்போம் திட்டம் மகத்தான முயற்சி.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சத் டத்தோஸ்ரீ ரமணனின் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் கூறினார்.
மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையினர் இந்த வாசிப்பை நேசிப்போம் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அதே வேளையில் நித்திரைக் கதைகள் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
ஆசிரியர்கள் முனைவர் கஸ்தூரி, நிரோசா ஆகியோர் 61கதைகள் கொண்டு இப்புத்தகத்தை எழுதியுள்ளனர்.
சிறப்பான முறையில் தயாராகி உள்ள இப் புத்தகம் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
மேலும் மக்களிடையே குறைந்து வரும் வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்க இதுபோன்ற முயற்சிகள் மகத்தானது. அதே வேளையில் இத்திட்டம் நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்
.அதற்கு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் முழு ஆதரவை வழங்குவார்.
தலைநகரில் நடைபெற்ற வாசிப்பை நேசிப்போம் திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய டத்தோ அன்புமணி பாலன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 4:33 pm
சுங்கை சிப்புட் பள்ளிவாசலில் சமய நல்லிணக்கத்துடன் ஆஷூரா கஞ்சி வழங்கப்பட்டது
July 13, 2025, 4:23 pm
துன் டாக்டர் மகாதீர் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm