
செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தையும் அதிகரிக்க வேண்டும்.
மஇகா துணைத் தலைவரும் எம்ஐஇடி தலைவருமான டான்ஶ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.
செத்திய அலாமில் செயல்பட்டு வரும் நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வருகைத் தந்தார்.
பள்ளியை சுற்றி பார்த்ததுடன் பள்ளி அறிவியல் ஆய்வகத்தை மேம்படுத்துவதற்காக 50,000 ரிங்கிட் காசோலையை அவர் வழங்கினா.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஸ்டேம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்க வேண்டும்.
குறிப்பாக இத்துறை மீதான ஆர்வத்தை மாணவர்களில் மத்தியில் அதிகரிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் இந்நிதி நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் இங்குள்ள மாணவர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என தாம் நம்புவதாக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm