நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

முஹம்மது சாலாவின் ஒப்பந்தம் நீட்டிப்பு: லிவர்பூல் ரசிகர்கள் மகிழ்ச்சி

லண்டன்:

லிவர்பூல் கால்பந்து அணியில் முஹம்மது சாலாவுக்கு இரண்டாண்டு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கும் வதந்திகளுக்கும் பதிலளிக்கும் விதமாக முகமது சாலா மீண்டும் லிவர்பூல் அணியில் புதிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.

ஆண்டுக்கு 20 மில்லியன் யூரோ ஊதியமாக முஹம்மது சாலாவுக்கு ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எகிப்திய நாட்டைச் சேர்ந்த 32 வயதாகும் முஹம்மது சாலா 2017 முதல் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். 

அதில் 394 போட்டிகளில் 243 கோல்களும், 111 முறை கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.

ரசிகர்களால் எகிப்திய அரசன் என அழைக்கப்படும் முஹம்மது சாலா இந்தாண்டுக்கான தங்கப் பந்து விருது வாங்குவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

பிரிமியர் லீக்கில் 73 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

இதற்கு சாலா முக்கியமானவர் என்பதால், அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது குறித்து லிவர்பூல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset