நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி 

கோலாலம்பூர்: 

2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது என்று மலேசியக் காற்பந்து சங்கமான எஃப் ஏ எம் உறுதிப்படுத்தியது. 

ஹரிமாவ் மலாயா அணி தற்போது மத்திய ஆசிய காற்பந்து கூட்டமைப்பின் கிண்ணத்தில் கவனம் செலுத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது 

CAFA போட்டியில் முழு கவனம் செலுத்துவதால் மலேசியா அணி வேறு எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காது. 

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டியில் மலேசியா அணி வெற்றியாளராக வாகை சூடியது. 

இறுதியாட்டத்தில் மலேசியா லெபனான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

CAFA 2025 போட்டி தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ளதால் ஹரிமாவ் மலாயா பி குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்த குழுவில் ஈரான், தஜிகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset