நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது

பாரிஸ்:

பிரபல கால்பந்து வீரர் டியோகோ ஜோத்தா அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவின் துயர மரணம் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஏனெனில் இந்த மரண விபத்தின் சூழ்நிலைகள் குறித்து ஸ்பெயின் போலிஸ் அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்.

லம்போர்கினியின் அதிவேகமே விபத்துக்கான காரணம் என்று சந்தேகிக்கப்படுவதாக ஆரம்ப போலிஸ் அறிக்கை கூறுகிறது.

வாகனம் மணிக்கு 120 கிமீ வேக வரம்பை மீறியதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகிச் சென்றது.

ஆனால் இந்த அதிகாரப்பூர்வ பதிப்பை இரண்டு நேரில் கண்ட சாட்சிகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு முதலில் வந்தவர்களில் ஒருவர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

சாட்சிகளில் ஒருவர் லோரி ஓட்டுநர் ஜோஸ் அசெவெடோ ஆவார். 

அவர் பின்னர் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொலியைப் பதிவு செய்தார் எனது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset