நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி 

மிலான்:

கால்பந்து விளையாட்டில் லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம் என்று ஏசிமிலான் ஜாம்பவான் பாவ்லோ மால்தினி கூறியுள்ளார்.

எனது பரபரப்பான வாழ்க்கையில் பல கால்பந்து ஜாம்பவான்களை எதிர்கொண்டுள்ளேன்.

மரடோனாவிலிருந்து தொடங்கி, பிரேசிலிய ரொனால்டோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ, மைக்கேல் பிளாட்டினி, ஜினெடின் ஜிடான் என பலரை கூறலாம்.

ஆனால், கால்பந்து வரலாற்றில் சிறந்த தற்காப்பு வீரராகக் கருதப்படும் லியோனல் மெஸ்ஸி நான் ஒருபோதும் சந்தித்ததில்லை.

எட்டு முறை பாலன் டி ஓர் விருதை வென்ற வீரரை எதிர்கொள்ளாததால் நான் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்.

நான் எதிர்கொண்ட மிகச்சிறந்த வீரர்களில் சிலர் மரடோனா, ரொனால்டோ (பிரேசில்). 

நான் மெஸ்ஸிக்கு எதிராக விளையாடியதில்லை, அதற்காக கடவுளுக்கு நன்றி என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset