நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட மலேசியருக்குக் குற்றப்பின்னணியைக் கொண்டவர்: ஐ.ஜி.பி ரசாருடின் தகவல் 

கோலாலம்பூர்: 

தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட மலேசியருக்குக் குற்றப்பின்னணிகள் உள்ளதாக அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார். 

இதற்கு முன் அவருக்கு எதிராக 10 குற்ற வழக்குகள் உள்ளதாக டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார் 

1969ஆம் ஆண்டு அவசர ஓர்டினென்ஸ் சட்டத்தின் கீழ் 62 வயதுடைய ஆடவர் மலேசியப் போலீசாரால் முதன்மை குற்றவாளியாக உள்ளதாக ரஸாருடின் குறிப்பிட்டார் 

தாய்லாந்து நாட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மலேசியர் கைது செய்யப்பட்ட உடனே இந்த தகவல் மலேசிய போலீஸ் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டது 

கைது செய்யப்பட்ட நபர் மலேசியாவில் தற்போது இல்லை என்றும் போலி ஆவணங்களைக் கொண்டு தாய்லாந்து நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும் அவர் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset