நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியுடன் அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தையா? சபா மாநில DAP மறுப்பு 

கோத்தா கினாபாலு: 

சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளிவந்த தகவலை சபா மாநில DAP மறுப்பு தெரிவித்துள்ளது 

தேசிய முன்னணியுடன் எந்தவொரு கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. நாங்கள் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை. 

இதனை சபா மாநில DAP கட்சித் தலைவர் பூங் ஜின் செ உறுதிப்படுத்தினார். 

அரசியல் கட்சிகளிடையே கூட்டம் என்பது சாதாரணமானதே. அதனை தவறாக கருத வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெளிவுப்படுத்தினார். 

நேற்று, தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து சபா மாநில சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கும் என்று சபா மாநில தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ரடின் கூறியிருந்தார். 

இந்த கூட்டணி கடந்தாண்டு உறுதிசெய்யப்பட்டதாக புங் மொக்தார் விளக்கினார். 

சபா மாநில DAP கட்சி எந்தவொரு அரசியல் கூட்டணியுடனும் அரசியல் ஒத்துழைப்பு மேற்கொள்ள தயாராக உள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset