நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸாவுக்கு நன்கொடை திரட்டிய சிங்கப்பூர் அமானத் கூட்டுறவு சங்கம்

சிங்கப்பூர்:

ரஹ்மத்தன் லில் ஆலமீன் பவுண்டேஷன் காஸா மக்களின் நிவாரணத்திற்காக கடந்த மாதம் நன்கொடை திரட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதில் அமானத் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் பங்கெடுத்தது.  சிங்கப்பூரில் பதிவு செய்யப் பட்டிருக்கும் இந்த கூட்டுறவு சங்கம் தன் உறுப்பினர்களிடமிருந்து $26,500 வெள்ளி நிதி திரட்டியது.  

ஏப்ரல் 14 அன்று யுசோப் இஷாக் பள்ளிவாசலில் நடந்த நிகழ்வு ஒன்றில் இந்தத் தொகைக்கான காசோலையை அமானத் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பஷீர் சலாஹுத்தீன் ரஹ்மத்தன் லில் ஆலமீன் பவுண்டேஷனின் நிர்வாகி நோர்லிண்டா ஓஸ்மான் வசம் அளித்தார்.  

அமானத் நிர்வாகத்திற்கு நன்றி கூறிய அவர், இவ்வாறு திரட்டப்பட்ட தொகை அனைத்தும் உணவுப் பொருட்கள், நீர், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களாக வாங்கப்பட்டு யூனிசெஃப், எகிப்திய ரெட் கிரஸன்ட், ஹியூமானிட்டி மேட்டர்ஸ் போன்ற சர்வதேச அற நிறுவனங்களின் உதவியோடு காஸா பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். 

நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளை அமானத் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ஜாஃபர் ஏஜாஸ் செய்திருந்தார். நிகழ்வில் சங்கத்தின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சுலைமான் காலித், முஹம்மது ஃபைசல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset