நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாஆலம் ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் ஆலயத்தின்  மகா கும்பாபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது

ஷாஆலம்: 

ஷாஆலம் ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் ஆலயத்தின்  மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் ஆலயம் ஷாஆலாமில் வட்டாரத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்குகிறது.

இவ்வாலயத்தின் திருப்பணிகள் அனைத்தும் பூர்த்தியான பிறகு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

ஆலய ஸ்தாபகர் சிவ ஸ்ரீ கோபால் ஆறுமுகம் தலைமையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ், அம்பாங் அர் ஆதி சங்கரர் திருமடத்தின் ஸ்தாபர் மகேந்திர குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக ஆயிரக்கணக்கான பக்தர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

நாட்டில் பல ஆலயங்கள் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. அவ்வாலய நிர்வாகங்களுக்கு எனது வாழ்த்துகள்.

அதே வேளையில் பல ஆலயங்கள் நிலப் பிரச்சினை, ஆர்ஓஎஸ் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

இப்பிரச்சினைகளுக்கு  சுமுகமான தீர்வும் காண ஆலய நிர்வாகங்கள் முயற்சிக்க வேண்டும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் பிரச்சனைகள் கடுமையாகும் வரை காத்திருக்க கூடாது.

இதன் அடிப்படையில் தான் மஹிமா ஆலயங்களை ஒன்றிணைத்து அதன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து போராடி வருகிறது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset