செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைவருக்கும் நன்றி: டான்ஶ்ரீ நடராஜா
பத்துமலை:
பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைவருக்கும் நன்றி.
கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்ததில் இருந்து பத்துமலையில் தைப்பூச விழா களைகட்டியது.
பக்தர்கள் தொடர்ச்சியாக தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வந்தனர்.
இதன் உச்சக் கட்டமாக கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வெள்ளி ரதம் 25 மணி நேர ஊர்வலத்திற்கு பின் பத்துமலையை வந்தடைந்தது.
25 மணி நேர இரத ஊர்வலம் என்பது வரலாற்றுச் சாதனையாகும். இதனால் அடுத்தாண்டு இரத ஊர்வல நேரத்தை மாற்றியமைக்கவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
இதை தொடர்ந்து பத்துமலையில் தைப்பூச உற்சவம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் இவ்விழா நிறைவு பெறும்.
இவ்விழா அமைதியாகவும் சீராகவும் நடைபெறுவதற்கு போலிஸ் அதிகாரிகள் தான் முக்கிய காரணம். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
மேலும் பத்துமலைக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், மஇகா தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் உட்பட அனைவருக்கும் நன்றி.
அதே வேளையில் எனக்கு பக்கபலமாக இருந்த என் மனைவி புவான்ஶ்ரீ மல்லிகா, என் புதல்வரும் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவக்குமார், அறங்காவலர்கள், ஊடகவியலாளர்கள், தொண்டூழியர்கள் என அனைவருக்கும் நன்றி.
இவர்கள் அனைவரும்தான் பத்துமலை தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவதற்கு காரணம் என்று டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 3:39 pm
ஆஸ்திரேலிய சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: மியன்மார் நாட்டு ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 26, 2026, 3:34 pm
ஜாலுர் கெமிலாங் கொடி அனைத்து மலேசிய மக்களின் சொத்தாகும்: சிலாங்கூர் சுல்தான் பெருமிதம்
August 26, 2026, 3:32 pm
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்
August 26, 2026, 2:17 pm
மலையாள சமூகத்தினர் அனைவருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள்: டத்தோஸ்ரீ சரவணன்
August 26, 2026, 12:56 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 3: ஏன் ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திர தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது ?
August 26, 2026, 11:23 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தயம்: மேலும் மூவரைப் போலிஸ் கைது செய்தது
August 26, 2026, 11:21 am
நாடு முழுவதும் 16 பகுதிகளில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 26, 2026, 10:10 am
