நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியன்மாரில் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு முற்றாகச் செயலிழக்கக்கூடும்: ஐ நா எச்சரிக்கை 

யாங்கூன்: 

மியன்மாரில் ஏற்கெனவே வலுவிழந்துள்ள சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு முற்றாகச் செயலிழக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

அதிக எண்ணிக்கையில் உள்ள நோயாளிகளைச் சமாளிக்க மருத்துவமனைகள் திணறுவதாக அது சொன்னது.

மருந்துமாத்திரைகளுக்கும் மருத்துவப் பொருள்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு இருப்பதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது.

மியன்மார் நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 3,500ஐத் தாண்டியுள்ளது.

அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு  நிறுவனம் கூறுகிறது.

மியன்மாரைச் சென்ற மாதம் 7.7 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் உலுக்கியதில் 17 மில்லியனுக்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லாண்டாக மியன்மாரில் உள்நாட்டுப் போர் நீடிக்கும் நிலையில் அது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

நூறாண்டில் மியன்மாரை உலுக்கியுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கங்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

ஏராளமானோர் இருப்பிடங்களை இழந்து தவிக்கின்றனர். 80 விழுக்காட்டுக்கும் அதிகமான கட்டடங்களுக்குச் சேதம்.

சீனா மியன்மாருக்குக் கூடுதல் மனிதாபிமான உதவிகளை அனுப்பவிருப்பதாகக் கூறியுள்ளது.

வீட்டைக் கட்டித்தருவது, அறுவைச் சிகிச்சைகள், மருந்துப் பொருள்கள் போன்றவற்றுக்கு அவை கைகொடுக்கும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset