செய்திகள் இந்தியா
டெல்லி செங்கோட்டை, ஜாமிஆ மஸ்ஜித் வளாகங்களில் வெடிகுண்டு: புரளி என்று போலிசார் தகவல்
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை, ஜாமிஆ மஸ்ஜித் வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் சோதனையில் இது புரளி என தெரியவந்தது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஜாமா மசூதி வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால், அந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, இது வெறும் புரளி என தெரியவந்தது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்
June 29, 2026, 4:08 pm
ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்
June 29, 2026, 10:31 am
கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
June 28, 2026, 4:04 pm
அயோத்தி ராமர் கோவிலைத் தொடர்ந்து மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு
June 27, 2026, 7:02 pm
“மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும்”: முதல்வர் சுவேந்து அதிகாரி
June 26, 2026, 11:34 am
