நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லெவி கட்டணத்தை கொண்டு முதலாளிகள் புதிய பட்டதாரிகளுக்கு பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

லெவி கட்டணத்தை கொண்டு முதலாளிகள் புதிய பட்டதாரிகளுக்கு பயிற்சிகளுடன் வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை வலியுறுத்தினார்.

எச்ஆர்டி கோர்ப் கடந்தாண்டு 2.3 பில்லியன் ரிங்கிட் லெவி கட்டணத்தை வசூல் செய்தது.

வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்து எச்ஆர்டி கோர்ப் சாதித்துள்ளது.

பெரிய அளவிலான லெவி கட்டணத்தை வசூல் செய்வதால் மட்டும் என்ன பயன் என  கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் எச்ஆர்டி கோர்ப் கிட்டத்தட்ட 2.2 பில்லியன் ரிங்கிட்டை தொழிலாளர்கள் மேம்பாட்டு திட்டங்களுக்காக திருப்பி தந்துள்ளது.

இது கிட்டத்தட்ட 89 சதவீத லெவி கட்டண வசூலிப்பாகும்.

மேலும் பல்வேறான பயிற்சி திட்டங்கள் தொழிலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இதை யாராலும் மறுக்க முடியாது என்று எச்ஆர்டி கோர்ப் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றிய அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

இந்நிகழ்வில் எச்ஆர்டி கோர்ப் வாரியக் குழு தலைவர் டத்தோ அப்துல் ஹுரைய்ரா, தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத், பெர்ஜாயா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ வின்சண்ட் டான் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் பேசிய அமைச்சர், இவ்வாண்டு தொழிலாளர்களுக்கு அதிகமான தொழில் திறன் பயிற்சிகளை வழங்க மனிதவள அமைச்சும் எச்ஆர்டி கோர்ப்பும் இலக்கு கொண்டுள்ளது.

அதே வேளையில் லெவி கட்டணத்தை கொண்டு புதிய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பும் பயிற்சிகளும் வழங்க முதலாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் நாட்டில் வேலையில்லா பிரச்சினைகள் குறையும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset