நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மழலையர் பள்ளியில் ஐந்து மாத ஆண் குழந்தை உயிரிழப்பு: போலீஸ் விசாரணை 

ஜொகூர் பாரு: 

ஜொகூர் மாநிலத்தில் உள்ள கங்கார் பூலாயில் உள்ள மழையலர் பள்ளி ஒன்றில் ஐந்து மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறது 

இஸ்கண்டார் புத்ரி மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் எம்.குமரேசன் இதனை கூறினார் 

நேற்று மாலை 4.24 மணிக்கு குழந்தை உயிரிழந்ததாக 31 வயது மதிக்கத்தக்க உள்ளூர் பெண்மணி ஒருவரிடமிருந்து போலீஸ் புகார் கிடைக்கப்பெற்றதாக அவர் சொன்னார் 

உடற்கூறு ஆய்வு மேற்கொண்டதில் எந்தவொரு காயங்களும் குழந்தைக்கு ஏற்படவில்லை என்று தெரிய வந்தது 

குழந்தை சுல்தானா அமீனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் 

2001ஆம் ஆண்டு சிறார்கள் சட்டத்தின் செக்‌ஷன் 31(1)இன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது என்று எம்.குமரேசன் தெரிவித்தார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset