நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பதிலடி வரியை மீட்டுக் கொள்ளாவிட்டால் சீனாவுக்கு மேலும் 50% வரி விதிக்கப்படும்: அதிபர் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்:

சீனா அதன் பதிலடி வரியை விலக்கிக் கொள்ளாவிட்டால் அந்நாட்டுக்கு மேலும் 50 விழுக்காடு வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியிருக்கிறார்.

அவர் அவ்வாறு செய்தால், சீனாவிலிருந்து சில பொருள்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் 104 விழுக்காடு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

சென்ற வாரம் திரு டிரம்ப் அறிவித்த புதிய வரிகளால் உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிந்து வருகின்றன. 

இந்நிலையில் புதிதாக வரி விதிப்பதை நிறுத்தி வைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset