
செய்திகள் மலேசியா
ஆசியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி: அச்சத்தில் முதலீட்டாளர்கள்
கோலாலம்பூர்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு காரணமாக ஆசியப் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் தாக்கத்தால் பொருளியல் மந்தநிலை உருவாகலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதனால அடுத்த மாதமே அமெரிக்கா அதன் வட்டிவிகிதத்தைக் குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
டிரம்ப்பின் வரிவிதிப்பைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்கப் பொருள்கள் மீது 34 விழுக்காடு கூடுதல் வரிகளை விதிக்கவிருப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பங்கு சந்தையில் டிரில்லியன் கணக்கான டாலர் நட்டம் ஏற்பட்டு வரும் நிலையில், திரு டிரம்ப் வரிவிதிப்பைச் சற்று தளர்த்துவார் என்று முதலீட்டாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
ஆனால், டிரம்ப் பங்குச் சந்தைகளில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றித் தமக்குக் கவலையில்லை என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா ஏற்றுமதி மதிப்பு இறக்குமதி மதிப்பை விட அதிகமாக இருக்கும் நிலை) சரி செய்யும் வரை சீனா மீது கவனம் செலுத்தபோவதில்லை என்றார் டிரம்ப்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 10, 2025, 11:18 am
பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இரு புத்தகங்களுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்தது
April 10, 2025, 10:54 am
பணியின்போது வகுப்பறையில் உறங்கும் ஆசிரியரின் காணொலி வைரல்
April 10, 2025, 10:53 am
புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அமெரிக்கா: மலேசியா வரவேற்பு
April 10, 2025, 10:26 am