நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் ஆதிக் என்னுடைய ரசிகர்; குட் பேட் அக்லி திரைப்பட வாய்ப்பு முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவம்: டார்க்கி

கோலாலம்பூர்:

குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவமாகும்.

நாட்டின் ரேப் பாடல்களின் முன்னோடி டார்க்கி நாகராஜா இதனை கூறினார்.

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் படங்களில் ஒன்று குட் பேட் அக்லி.

நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், அதன் வித்தியாசமான கதைக்களம்,  பிரமாண்டமான தயாரிப்பால் ரசிகர்களிடையே பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.

இந்தப் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் புலி புலி  என்ற பாடலைப் பாடி நடித்தது குறித்து டார்க்கி கூறியதாவது,

இந்தப் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவம். குட் பேட் அக்லி  திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் என்னுடைய ரசிகர். அவர் என்னுடைய பாடல்களைக் கேட்டு ரசிப்பாராம். 

அவருடைய உதவி இயக்குநர் ஹரிஷ் என்னைத் தொடர்பு கொண்டு, இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடி நடிக்க வேண்டும் என்று கேட்டார். இப்படித்தான் நான் இந்தப் படத்தில் இணைந்தேன் என்று டார்க்கி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஒரு இயக்குநர் தனது பாடல்களை ரசித்து, அதன் மூலம் தன்னை அணுகியது டார்க்கிக்கு பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

இது, தமிழ் சினிமாவில் புதிய திறமைகளுக்கு வாய்ப்பு வழங்கும் ஆதிக்கின் திறந்த மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது. 

புலி புலி பாடல், படத்தின் டிரெய்லரில் இடம்பெற்று, ஏற்கெனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டார்க்கியின் தனித்துவமான குரலும், அவரது ஆற்றல்மிகு நடிப்பும் இந்தப் பாடலை படத்தின் முக்கிய அம்சமாக மாற்றியுள்ளன என்று அவர் கூறினார்.

இதனிடையே இது தமிழ்நாட்டிற்கு முதல் வருகை. ஆனால், இங்கு வருவதற்கு முன்பு அவருக்கு பல்வேறு அச்சங்கள் இருந்தது.

இதற்கு முன்பு நான் தமிழ்நாட்டுக்கு வந்தது இல்லை. இங்கே வந்தால் அப்படி இருக்கும், இப்படி இருக்கும், அங்கே போகாதீங்க, இங்கே போகாதீங்க என்று அங்கிருப்பவர்கள் பயமுறுத்தினார்கள்.

 மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவது பற்றி அவருக்கு முன்யோசனைகள் இருந்தாலும், அவை அனைத்தும் வந்த பிறகு தவிடுபொடியாகியுள்ளன.

ஆனால் தமிழ்நாட்டில் என்னை பாசத்துடன் மிகவும் அக்கறையாகக் கவனித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது என்று டார்க்கி உணர்ச்சி பொங்க பதிவு செய்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset