செய்திகள் கலைகள்
நடிகை அதிதி ராவ் பெயரில் வாட்ஸ் அப் மூலம் மோசடி: எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்
சென்னை:
தமிழில் ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘ஹே சினாமிகா’ உள்பட சில திரைப் படங்களில் நடித்திருப்பவர் அதிதி ராவ் ஹைதாரி.
இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், நடிகர் சித்தார்த்தைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் தன் பெயரில் நடக்கும் மோசடி குறித்து இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்தி வாட்ஸ்-அப்பில் ஒருவர் மோசடி செய்து வருகிறார். தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, புகைப்படக் கலைஞர்களிடம் ‘போட்டோ ஷூட்’டுக்காக தொடர்பு கொண்டு ஏமாற்றி வருகிறார்.
அது நான் இல்லை, நான் இதுபோன்று யாரையும் அணுகமாட்டேன்.தொழில் தொடர்பான எந்த விஷயத்துக்கும் தனிப்பட்ட எண்ணை பயன்படுத்துவதில்லை. அனைத்தும் எனது மேலாளர் குழு மூலமாகவே நடக்கும். அந்த எண்ணுடன் எந்த தொடர்பும் கொள்ள வேண்டாம்” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
