செய்திகள் கலைகள்
குழந்தைகள் நலனுக்கான யுனிசெஃப் தூதரானார் கீர்த்தி சுரேஷ்
சென்னை:
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் இப்போது ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சந்துரு இயக்கியுள்ள இப்படம் நவ.28-ல் வெளியாக இருக்கிறது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் ‘தோட்டம்’, மிஷ்கினுடன் ஒரு படம் என நடித்து வருகிறார்.
இந்நிலையில், யுனிசெஃபின் குழந்தைகள் நலனுக்கான தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தனது சமூக வலை தளப் பக்கத்தில் தெரிவித் துள்ளஅவர், “இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெஃப் தூதராக இணைவதில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக வளரவும், கற்றுக்கொள்ளவும், கனவு காணவும் தகுதியானது.
யுனிசெஃப் அதை நனவாக்க கடந்த 76 ஆண்டுகளாக, உழைத்து வருகிறது. அந்தப் பணியில் ஒரு பகுதி யாக நானும் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடை கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இக்குழு வில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மண் குர் ரானா, கரீனா கபூர் கான் ஆகியோருடன் கீர்த்தி சுரே ஷும் இணைந்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
