
செய்திகள் மலேசியா
அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிபருடன் விவாதிக்கப்பட்டது: பிரதமர்
புத்ராஜெயா:
அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் விவாதிக்கப்பட்டது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் நட்பு ரீதியான பயணத்தைத் தொடர்ந்து முக்கியமான பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக ஆசியான் நாடுகள் மீது அமெரிக்கா விதித்த புதிய வரிகளும் இதில் அடங்கும்.
அதைத் தவிர, சமீபத்திய நிலநடுக்க பேரழிவால் பாதிக்கப்பட்ட மியான்மார் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் கூட்டு முயற்சிகள், நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விவாதிக்கப்பட்டது.
பிராந்திய அமைதி, செழிப்பு என்ற பெயரில் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான சகோதர உறவுகளையும் ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2025, 10:54 am
பணியின்போது வகுப்பறையில் உறங்கும் ஆசிரியரின் காணொலி வைரல்
April 10, 2025, 10:53 am
புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அமெரிக்கா: மலேசியா வரவேற்பு
April 10, 2025, 10:26 am
நீதிபதிகள் நியமனங்களில் அரசாங்கம் தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்: பிரதமர்
April 9, 2025, 5:56 pm