நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க வரி விதிப்பால் உலகப் பங்குச் சந்தைகளில் மீண்டும் BLACK MONDAY நிகழுமா? பங்குச்சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகளைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

வாரத்தின் தொடங்க நாளான இன்று  சர்வதேச பங்குச் சந்தைகளில் கடுமையான தாக்கம் ஏற்படும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கடந்த 1987, அக்டோபர் 19-ஆம் தேதி உலகளவில் வாரத்தின் தொடக்கத்தில் பங்குச் சந்தைகள் சரிவால் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டது.

இது கருப்புத் திங்கள், Black Monday என குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் சுமார் 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் இன்று Black Monday நிகழும் என பிரபல பங்குச் சந்தை வல்லுநர் ஜிம் கார்மர் எச்சரித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் விதிகளின்படி செயல்படும் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் பலன் அளிக்கவில்லை என்றால், 1987 சூழ்நிலை மிகவும் உறுதியானது.

ஆனால் இந்தச் சரிவு நிச்சயம் பொருளாதர மந்தநிலைக்கு வழிவகுக்கும் என கூற முடியாது என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் Black Monday என்ற ஹஸ்டேக் டிரண்ட் ஆகி வருகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset