
செய்திகள் மலேசியா
மலேசியாவுக்கு விதிப்பட்டுள்ள 24 விழுக்காடு பரஸ்பர வரியால் நாட்டின் முக்கிய ஏற்றுமதிகள் பாதிக்கப்படலாம்
கோலாலம்பூர்:
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான வர்த்தக வரிகளை அமெரிக்கா விதித்துள்ள நடவடிக்கை உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், இந்தியா, சீனா, பிரிட்டன் உட்பட சுமார் 100 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்துள்ளார்.
இந்தப் பரஸ்பர வரிவிதிப்பு என்பது ஒரு வர்த்தகக் கொள்கையாகும்.
வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை (ஒரு நாடு ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்வதை நிவர்த்தி செய்ய அமெரிக்கா இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.
இந்நிலையில், மலேசியாவுக்கு விதிப்பட்டுள்ள 24 விழுக்காடு பரஸ்பர வரியால் நாட்டின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள், குறிப்பாக மின் மற்றும் மின்னணு சாதனங்கள், தோல் பொருட்கள், மற்றும் பற்பசேக பொருட்களுக்கு நேரடி விளைவுகளை ஏற்படுத்தும் என மதிப்பீடுகள் கூறுகின்றன.
மலேசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் காபி, கோகோ உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை சரிவை சந்தித்துள்ளது.
இதற்கான முக்கிய காரணம், புதிய வரிகளால் அமெரிக்க சந்தையில் குறைந்த தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மலேசியாவிற்கு பொருளாதார சவாலாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மலேசிய அரசு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த வரிகளை மீள எடுத்துவிட செய்ய முடியுமா என்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 10, 2025, 11:18 am
பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இரு புத்தகங்களுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்தது
April 10, 2025, 10:54 am
பணியின்போது வகுப்பறையில் உறங்கும் ஆசிரியரின் காணொலி வைரல்
April 10, 2025, 10:53 am
புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அமெரிக்கா: மலேசியா வரவேற்பு
April 10, 2025, 10:26 am