நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

14 நாடுகளுக்கு எதிராக தற்காலிக விசா தடையை சவூதி அரேபியா விதித்துள்ளது 

ரியாத்: 

ஹஜ்ஜுக் காலத்தை முன்னிட்டு பாகிஸ்தான் உட்பட 14 அரபு நாடுகளுக்கு எதிராக சவூதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது 

சவூதி அரேபியா அரசாங்கம் தற்காலிக விசா தடையைக் குறிப்பிட்ட நாடுகளுக்கு விதித்தது 

உம்ரா விசா கொண்டிருப்பவர்கள் ஏப்ரல் 13ஆம் தேதி வரை மட்டுமே சவூதி அரேபியா நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் 

இந்தியா, வங்காளதேசம், இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், அல்ஜீரியா, சூடான். துனிசியா, யமான், எத்தியோபியா ஆகிய நாடுகள் இந்த தடை விதித்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன 

ஹஜ்ஜுக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சவூதி அரேபியா வெளியுறவு அமைச்சு தெரிவித்தது 

சட்டவிரோதமாக சவூதி அரேபியாவிற்குள் நுழைய முயன்றால் எதிர்காலத்தில் ஐந்து ஆண்டுகள் அந்நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset