நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிபோங் தெபால் தொகுதி பிகேர் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்குப் ஃபட்லினா போட்டி

ஜார்ஜ் டவுன்: 
'
நிபோங் தெபால் தொகுதி பிகேர் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடவுள்ளதாக நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லினா சிடேக் அறிவித்துள்ளார். 

பிகேஆர் கட்சி உறுப்பினர்கள்,தொகுதி மக்கள் ஆகியோரின் ஆதரவால் தாம் இம்முடிவை எடுத்துள்ளதாக கல்வியமைச்சருமான அவர் குறிப்பிட்டார். 

தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக இருப்பதற்கு தாம் இத்தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் ஃபட்லினா கூறினார்.

மேலும், தாம் தேர்தலில் வெற்றி பெற நிபோங் தெபால் பிகேஆர் கட்சி உறுப்பினர்களின் ஆதரையும் ஃபட்லினா கோரியுள்ளார். 

பிகேஆர் கட்சி தேர்தல் அடுத்த மாதம் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset