
செய்திகள் கலைகள்
குஜாராத் கலவரத்தை நினைவுப்படுத்தும் காட்சிகள் 'எம்புரான்' திரைப்படத்தில் வைத்ததன் எதிரொலியாக இயக்குனர் ப்ரித்விராஜூக்கு வருமானத்துறை நோட்டிஸ்
திருவனந்தபுரம்:
ப்ரித்விராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் 'எம்புரான்' திரைப்படம் வெளியாகியிருந்தது. மோகன் லால் நடித்திருக்கும் இத் திரைப்படத்திற்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது.
படத்தில் குஜாராத் கலவரத்தை நினைவுப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், இந்துத்துவ கொள்கைகளையும், தலைவர்களையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பாஜக செய்த அக்கிரமங்களை தெளிவாக சொல்லி இருப்பதாக ஒரு தரப்பினர் இதனை பாராட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி தமிழகத்திலிருந்தும் பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
இப்படியான சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து நடிகர் மோகன்லால் மன்னிப்புக் கோரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதுபோக, சில காட்சிகளை நீக்குவதாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து படத்தில் 24 கட்களை மேற்கொண்டு புதிய பதிப்பை மறுவெளியீடு செய்தனர். இதில் பல்வேறு காட்சிகளை கட் செய்ததோடு படத்தின் முக்கிய வில்லனின் பெயரையும் மாற்றியிருக்கிறார்கள். இப்படியான விஷயங்களுக்குப் பிறகு இப் படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கதுறையினர் நேற்றைய தினம் சோதனை நடத்தியிருந்தனர்.
இவருடைய சமீபத்திய படங்களான `கடுவா' ,`ஜன கன மன' , `கோல்டு' போன்ற திரைப்படங்களுக்குப் நடிகராக இல்லாமல் இணை தயாரிப்பாளராக 40 கோடி ஊதியம் பெற்றதை கண்டறிந்து அது தொடர்பான ஊதிய விவரங்களை வருமான வரித்துறையினர் கேட்டிருக்கிறார்கள்.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வருமான வரித்துறையினர் நடிகர் ப்ரித்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது மாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜகவின் மேலிட கண்ணசைவில் வருமான வரித்துறையினர் நடிகர் ப்ரித்விராஜுக்கு அழுத்தம் தருவது கண்டிக்கத்தக்கது என்று பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 7:48 am
90களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கோவாவில் ஒன்றுகூடல்
July 28, 2025, 3:38 pm
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
July 28, 2025, 11:18 am
மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
July 26, 2025, 4:11 pm
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன்
July 23, 2025, 4:41 pm
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
July 22, 2025, 10:00 am
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
July 20, 2025, 10:26 am