நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எண்ணெய் கசிவு: மோசமான விளைவுகளை சந்தித்ததாக சிங்கப்பூர் கூறுகிறது

ஜொகூர் பாரு:

கடலில் நிகழ்ந்த எண்ணெய் கசிவால் மோசமான விளைவுகளை சந்தித்ததாக சிங்கப்பூர் கூறுகிறது.

சிங்கப்பூர் கடல்சார், துறைமுக ஆணையம் இதனை ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

பாசிர் கூடாங்கில் உள்ள தஞ்சோங் லாங்சாட் துறைமுக முனையத்தில் நேற்று  எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டது.

இந்த எண்ணெய்  கசிவால் சிங்கப்பூர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டிற்குள் எண்ணெய் கசிவைத் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

சுத்தம் செய்யும் பணி ஒரு சில நாட்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சம்பந்தமாக சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் ஆகியவை எண்ணெய் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் முயற்சிகளை எளிதாக்குவதற்காக பொதுமக்களுக்கு தொடர்ந்து மூடுவதற்கான வழிமுறைகளை வெளியிட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset