நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாத்தாவின் சாம்பலைத் தெரியாமல் சாப்பிட்ட சிறுவன்

லண்டன்: 

பிரிட்டனில் ஒரு வயதுச் சிறுவன் தவறுதலாகத் தமது தாத்தாவின் சாம்பலைச் சாப்பிட்டான். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேற்று நடந்தது 

சிறுவன் வீட்டின் வரவேற்பறையில் விளையாடிக்கொண்டிருந்தான். அவனது தாயார் துணிகளை வைப்பதற்கு மாடியில் உள்ள அறைக்குச் சென்றார்.

கீழே வந்து பார்த்த தாயாருக்கு அதிர்ச்சி. சிறுவன்மீது சாம்பல் கொட்டிக்கிடந்தது. அவனது வாயிலும் ஏதோ இருப்பதைக் கவனித்தார்.

தமது தந்தையின் சாம்பலை சிறுவன் தவறுதலாகச் சாப்பிட்டதை உணர்ந்த தாயார் அதிர்ந்துபோனார்.
அவர் அந்தக் காட்சியை உடனே காணொளியாகப் பதிவு செய்தார்.

அதில் அவர் சாம்பல் இருந்த கலன் காலியாக இருப்பதைக் காட்டி பெருமூச்சுவிட்டு தமது மகனின் குறும்புச்செயலை விவரித்தார்.

நல்லவேளையாகச் சிறுவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் சொன்னார்.

-மவிதிதிரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset