நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மியன்மாரில் நிரந்தர போர்நிறுத்தம் அவசியமாகும்: இந்தியா வலியுறுத்தல் 

பெங்கொக்: 

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அந்நாட்டில் தற்காலிக போர்நிறுத்தம் அமலில் உள்ளது 

இந்த தற்காலிக போர்நிறுத்தத்தை நிரந்தமாக ஆளும் மியன்மார் இராணுவ அரசாங்கம் கொண்டு வர வேண்டும். இதுவே இந்தியாவின் நிலைப்பாடாகும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார் 

பிரதமர் நநேந்திர மோடி மியன்மார் ஜுந்தா இராணுவ தலைவரை பெங்கொக்கில் சந்தித்து பேசினார். 

மேலும், மியன்மாரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் பிந்தைய நிலவரங்களையும் இருவரும் கலந்தாலோசித்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் 

முன்னதாக 55 மில்லியன் மக்கள் வாழும் மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை நிலநடுக்கத்தால் 3145 பேர் பலியான வேளையில் 4,500 க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset