நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரதமரை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்தார்

புத்ரா ஜெயா:

இன்று பிரதமரின் அலுவலகத்திற்கு சினிமா பின்னனி இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாகப் பேசினார். அவரை வரவேற்றதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று பிரதமர் டத்தோ அன்வர் இப்ராஹிம் கூறினார்.

மலேசியா - இந்தியாவிற்கு இடையிலான கலை, கலாச்சார உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.

மலேசியாவில் உள்ள இந்திய இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்தியத் திரைப்படங்கள், இசைத் துறை தொடர்பான நினைவுகளை அவர் தம்மோடு பகிர்ந்து கொண்டார் என்று பிரதமர் முக நூல் பதிவில் கூறியுள்ளார்.

இந்நாட்டின் பன்முகத்தன்மை, நல்லிணக்கத்தின் சின்னங்களாகத் திகழும் கலை, கலாச்சாரத்தை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதை நான் அவரிடம் கூறினேன்.

நாளை நடைபெறவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset