நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது: படக்குழுவினர் அறிவிப்பு 

சென்னை: 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 

இது நடிகர் தனுஷின் 52ஆவது படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் அருண்விஜய் வில்லனாக இந்த படத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

தனுஷின் 'இட்லி கடை' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.45 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset