நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கார் நிறுத்துமிட விவகாரத்தில் தகராறு: பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் காவல்துறையினரால் கைது 

சென்னை: 

நடிகர் தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் ஐகோர்ட்டு நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது 

இதில் ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்த நிலையில் இருவரும் அண்ணா நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனையடுத்து, நடிகர் தர்ஷன், நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் போலீசில் நீதிபதியின் மகன் புகாரளித்திருக்கிறார்.

இரு தரப்பும் போலீஸ் புகார் அளித்துள்ளதால் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் நடிகர் தர்ஷன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் 

நடிகர் தர்ஷன் பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டார். மேலும், கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset