நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

39 மணி நேரத்திற்கு மேல் துருக்கி தியர்பாகிர் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட பயணிகள்

அங்காரா: 

வீர்ஜின் அட்லான்டிக் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் துருக்கியின் தியர்பாகிர் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்.

39 மணிநேரத்திற்கு மேல் அவர்கள் விமான நிலையத்தில் உள்ளனர்.

வீர்ஜின் அட்லான்டிக் நிறுவனத்தின் VS358 விமானம் ஏப்ரல் 2-ஆம் தேதி லண்டனிலிருந்து மும்பைக்குப் புறப்பட்டது.

அப்போது அவசர மருத்துவக் காரணங்களுக்காக தியர்பாகிர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.

விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்.

விமானம் தரையிறக்கப்பட்டவுடன் சோதனை செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்கள், விமானச் சிப்பந்திகள் ஆகியோரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று விமான நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சோதனைகள் முடிந்தவுடன் விமானம் புறப்பட அனுமதி கிடைத்தால் இன்று மும்பைக்கு விமானம் புறப்படும் என்றார் அவர்.

அனுமதி கிடைக்காவிட்டால் வாடிக்கையாளர்களை வேறொரு விமானத்தில் நாளை அனுப்பத் திட்டமுள்ளது.

அதற்குப் பயணிகள் துருக்கியின் மற்றொரு விமான நிலையத்திற்குப் பேருந்து வழி அனுப்பப்படுவர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தங்கும் வசதிகள் போன்றவற்றை விமான நிறுவனம் செய்து கொடுத்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset