
செய்திகள் கலைகள்
பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார்
மும்பை:
வயது மூப்பு காரணமாகப் பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் தனது 87-ஆவது வயதில் இன்று காலமானார்.
ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான மனோஜ் குமார், 1937-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி பிறந்தார்.
இவர் பெரும்பாலும் நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்தும், இயக்கியும் பிரபலமானவர். இவரைப் பரத் குமார் என்றும் அழைத்து வருகின்றனர்.
புராப் அவுர் பஸ்ஜிம், கிரான்டி, ரொட்டி, காபாடா அவுர் மாகான் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
1992-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2015-ஆம் ஆண்டில் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் மத்திய அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
பா.ஜ.காவில் இணைந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த மனோஜ் குமார், வயது மூப்பு காரணமாக, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்தித்து வந்தார்.
இந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 7:48 am
90களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கோவாவில் ஒன்றுகூடல்
July 28, 2025, 3:38 pm
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
July 28, 2025, 11:18 am
மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
July 26, 2025, 4:11 pm
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன்
July 23, 2025, 4:41 pm
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
July 22, 2025, 10:00 am
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
July 20, 2025, 10:26 am