நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஜூலையில் வெளியாகிறது வடிவேலு - ஃபஹத் ஃபாசிலின் ‘மாரீசன்’

சென்னை:

'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலு- ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் படம் ‘மாரீசன்’. சுதீஷ் சங்கர் இயக்கும் இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமான இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset