
செய்திகள் உலகம்
குயின் மேரி 2 சொகுசு கப்பலில் பரவிய 'நோரோ' வைரஸ் தொற்று: 250 சுற்றுலா பயணிகள் பாதிப்பு
லண்டன்:
இங்கிலாந்து குனார்ட் நிறுவனத்தின் குயின் மேரி 2 சொகுசு கப்பலில் பயணம் செய்தவர்கள் 'நோரோ' என்னும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இந்தத் தொற்று பாதிப்பால் பயணிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி சொகுசு கப்பலில் உள்ள 250 சுற்றுலா பயணிகளுக்கும், 20 சிப்பந்திகளுக்கும் இந்த நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதும், மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளாதபட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு என தெரிவித்துள்ளனர்.
தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 10:26 am
மியான்மர் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 3,145 ஆக உயர்வு
April 3, 2025, 5:45 pm
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
April 3, 2025, 5:39 pm
20 போலித் திருமணங்களில் மணப்பெண்ணாக நடித்துப் பணம் சம்பாதித்த பெண்
April 3, 2025, 3:45 pm
விவாகரத்து கோரிய கணவனை கொன்ற மனைவி: அமெரிக்காவில் பரபரப்பு
April 3, 2025, 10:40 am
மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 5 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்
April 2, 2025, 2:15 pm
உலகளவில் தங்கத்தின் விலை உயர்வு
April 2, 2025, 2:14 pm