
செய்திகள் உலகம்
20 போலித் திருமணங்களில் மணப்பெண்ணாக நடித்துப் பணம் சம்பாதித்த பெண்
ஷாங்காய்:
சீனாவில் 20 திருமணங்களில் மணப்பெண்ணாக நடித்து ஒரு பெண் பணம் பெற்றுள்ளார்.
சியாவ் மெய் (Cao Mei) என்ற அந்தப் பெண் திருமணம் சார்ந்த சமூக அழுத்தங்களால் அவதியுறும் ஆண்களுக்கு உதவ அவ்வாறு நடித்ததாகக் கூறினார்.
2018-ஆம் ஆண்டில் நண்பர் ஒருவருக்கு உதவ அவரது பெற்றோர் முன்னிலையில் காதலியைப்போல நடிக்க அவர் ஒப்புக்கொண்டார்.
அதேபோன்ற அழுத்தங்களை எதிர்நோக்கும் ஆண்கள் பலர் நாட்டில் உள்ளதை உணர்ந்த சியாவ் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புக் கிட்டியது என நம்பினார்.
கடந்த 7 ஆண்டில் 20 திருமணங்களில் மணப்பெண்ணாக அவர் நடித்துள்ளார்
அந்தப் பெண் தம் மீது சந்தேகம் ஏழாமல் இருக்க மணமகனின் குடும்பத்தாரைத் திருமணத்திற்கு முன் சந்திப்பார்.
திருமண விழாவில் முகமளர்ச்சியுடன் மணப்பெண் அலங்காரத்தில் இருப்பார்.
அவ்வாறு நடிக்க அவர் சுமார் 270 வெள்ளி பெறுவதாகக் கூறினார்.
சீனாவில் மணமக்களின் பெற்றோராக நடிப்பதற்கும் பலர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 10:26 am
மியான்மர் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 3,145 ஆக உயர்வு
April 3, 2025, 5:45 pm
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
April 3, 2025, 5:41 pm
குயின் மேரி 2 சொகுசு கப்பலில் பரவிய 'நோரோ' வைரஸ் தொற்று: 250 சுற்றுலா பயணிகள் பாதிப்பு
April 3, 2025, 3:45 pm
விவாகரத்து கோரிய கணவனை கொன்ற மனைவி: அமெரிக்காவில் பரபரப்பு
April 3, 2025, 10:40 am
மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 5 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்
April 2, 2025, 2:15 pm
உலகளவில் தங்கத்தின் விலை உயர்வு
April 2, 2025, 2:14 pm