நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 5 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்

நேபிடாவ்: 

மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 5 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் இன்று நடைபெற்ற மீட்பு பணியின்போது கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

தலைநகர் நேபிடாவில் நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெற்ற மீட்பு பணியின்போது 26வயதான இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, மீட்புப்பணியின் 4-ஆவது நாளான நேற்று கட்டட இடிபாடுகளுக்கு சிக்கிய 63 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset