நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Setia Herba மருந்தை வாங்க வேண்டாம்: சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் தகவல்

சிங்கப்பூர்:

இணையத்தில் விற்கப்படும் Setia Herba மருந்தை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்று சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

100% இயற்கையான மூலிகைகளைக் கொண்டு தயாரிப்பதால் அம்மருந்து உண்பதற்குப் பாதுகாப்பானது என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் மறுத்துள்ளது. 

மாறாக, அதில் சக்திவாய்ந்த ஊக்கமருந்து இருப்பதாக ஆணையம் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது.

டிக் டாக் விற்பனையாளரிடமிருந்து வாங்கிய Setia Herba மருந்தை உட்கொண்ட பிறகு ஆடவர் தமது மூட்டுவலி குறைந்ததை உணர்ந்தார்.

அவரது நண்பர் அது குறித்து ஆணையத்திடம் தகவல் அளித்தார்.

அதனை உட்கொண்டால் பல சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம் என இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது.

மேலும் மக்களை ஏமாற்றுவதற்காக அது சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டது.

Dexamethasone, prednisolone போன்ற சக்திவாய்ந்த ஊக்கமருந்துகளை
மருத்துவரின் மேற்பார்வையின்கீழ் மட்டுமே உட்கொள்ளவேண்டும்.

அதனை மருத்துவரின் மேற்பார்வையின்றி நீண்டகாலத்திற்கு உட்கொண்டால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், சோர்வு போன்ற பலதரப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகள் உண்டாகலாம்.

அதனைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் Shopee, Carousell, Lazada ஆகிய தளங்களுடன் இணைந்து Setia Herba மருந்தை விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset