
செய்திகள் உலகம்
நிலநடுக்க மீட்புப்பணி தீவிரம்: மியான்மரில் 10 ஆயிரம் கட்டடங்கள் இடிந்தன
நைப்பியிடோவ்:
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்துள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலான கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் கனரக எந்திரங்கள் இல்லாததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை, கர்ப்பிணி பெண் உள்பட 4 பேரை 60 மணி நேரத்துக்கு பிறகு சீன மீட்புப் பணியாளர்கள் குழு மீட்
இந்த நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் தண்ணீர் விநியோகம், சுகாதார உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவாச தொற்றுகள், தோல் நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்க் கிருமிகளால் பரவும் நோய்கள், தட்டம்மை போன்ற தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கான பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 3, 2025, 5:45 pm
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
April 3, 2025, 5:41 pm
குயின் மேரி 2 சொகுசு கப்பலில் பரவிய 'நோரோ' வைரஸ் தொற்று: 250 சுற்றுலா பயணிகள் பாதிப்பு
April 3, 2025, 5:39 pm
20 போலித் திருமணங்களில் மணப்பெண்ணாக நடித்துப் பணம் சம்பாதித்த பெண்
April 3, 2025, 3:45 pm
விவாகரத்து கோரிய கணவனை கொன்ற மனைவி: அமெரிக்காவில் பரபரப்பு
April 3, 2025, 10:40 am
மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 5 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்
April 2, 2025, 2:15 pm
உலகளவில் தங்கத்தின் விலை உயர்வு
April 2, 2025, 2:14 pm