நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நேரடியாக வந்த பிரதமர் உடனடியாக நிதியுதவியை அறிவித்தார்

சுபாங்ஜெயா:

எரிவாயு குழாய் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நேரடியாக வந்த பிரதமர் உடனடியாக நிதியுதவியை அறிவித்தார்.

சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் எரிவாயு குழாய் தீ விபத்து நிகழ்ந்தது.

இந்த சம்பவ இடத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக வருகை புரிந்தார்.

சம்பவ இடத்தில் பாதிப்புகள் சேதங்களை அவர் பார்வையிட்டார்.

மேலும் இந்த தீ விபத்தில் முழுமையாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 5,000 ரிங்கிட் உடனடி நிதியுதவியை அவர் அறிவித்தார்.

வீடுகள் பகுதியளவு சேதமடைந்த 100க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 2,500 ரிங்கிட் நிதியுதவியை அறிவித்தார்.

சேதமடைந்த வீட்டுப் பகுதியை மீட்டெடுப்பதற்கான பொறுப்பை பெட்ரோனாஸ், மாநில அரசுடன் சேர்ந்து அரசாங்கம் முழுமையாக ஏற்கும்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு முன்பு, 

அவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

வீட்டு வசதி,  உள்ளாட்சி அமைச்சு, மாநில அரசு, பெட்ரோனாஸ் ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில், 

அவர்களின் வீட்டை குறுகிய காலத்தில் மீட்டெடுப்பது சாத்தியமற்றது என்று கண்டறியப்பட்டது.

ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் மட்டுமே நீடித்த வெள்ளப் பேரழிவைப் போல அல்லாமல், ஒரு வருடம் ஆகும்.

ஆகையால் உடனடி,  நியாயமான நடவடிக்கை எடுப்பது எப்படி என்பது குறித்து அரசாங்கமும் பெட்ரோனாஸும் விவாதித்து வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset