நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவில் இருந்து தேவை அதிகரித்ததால் செம்பனை விலை விரைவில் நிலை பெறும்

கோலாலம்பூர்:

இந்தியா போன்ற முக்கிய இறக்குமதி சந்தைகளில் இருந்து உற்பத்தி மற்றும் தேவை மீட்சியடைந்ததைத் தொடர்ந்து, செம்பனை விலைகள் விரைவில் நிலைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய செம்பனை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெல்விண்டர் கவுர் இதனை தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை செம்பனை  இறக்குமதி பலவீனமாக இருந்தது.

குறிப்பாக இந்தியாவில் தாவர எண்ணெய் இருப்பு கடுமையாக சரிந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக சோயாபீன் எண்ணெய் இறக்குமதியில் அதிகரிப்பு இருந்த போதிலும், இந்த விஷயத்தில் இந்தியா அதன் செம்பனை தேவையின் ஒரு பகுதியை மட்டுமே ஈடு செய்கிறது.

இந்த சூழ்நிலையின் அடிப்படையில் செம்பனை விலையை ஆதரிக்கும் வகையில், வரும் வாரங்களில் இந்தியா பாமாயில் இறக்குமதியை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும்  கச்சா செம்பனை விலைகளின் ஏற்ற இறக்கங்கள் உலகளாவிய விநியோகம், தேவை இயக்கவியலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்றும் பெல்விண்டர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset