
செய்திகள் மலேசியா
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
சுபாங்ஜெயா:
புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருந்த ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள ஜாலான் புத்ரா ஹார்மோனியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்,
ஆயிரக்கணக்கான காயமடைந்தவர்கள் உள்ளே நுழைந்த பிறகு இன்று காலை திறக்கப்பட்டது.
ஆலயக் குழு உறுப்பினர்கள் காயமடைந்தவர்களைக் கண்டதும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, உடனடி உதவி தேவைப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
ஆலயத்தின் ஆலோசகர் ஆர். மாணிக்கவாசகம் இதனை கூறினார்.
மக்கள் உதவி கேட்டு அலறிக் கொண்டிருந்தனர்.
எனவே ஆலயத் தலைவர், குழு உறுப்பினர்கள், பக்தர்கள் உடனடியாக கதவைத் திறந்து அவர்களை உள்ளே அனுமதித்தனர்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு போலிஸ், துணை மருத்துவர்களின் வருகையுடன் ஆலயம் அவசர உதவி மையமாக மாற்றப்பட்டதாக மாணிக்கவாசகம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 2:24 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்
April 2, 2025, 2:04 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்திலிருந்து இரண்டு நாய்கள் மீட்பு
April 2, 2025, 2:03 pm
தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி
April 2, 2025, 2:02 pm
எரிவாயு குழாய் அருகே நிலப் பணிகள் மேற்கொள்ள குத்தகையாளருக்கு அனுமதி உள்ளதா?காவல்துறை விசாரணை
April 2, 2025, 11:23 am
மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரின் உடல்களை மலேசிய மீட்புக் குழு மீட்டது
April 2, 2025, 11:22 am