நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி

புத்ராஜெயா:

சுபாங்ஜெயா எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை  உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஜூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.

சுபாங் ஜெயா ஜாலான் புத்ரா ஹார்மோனி, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்து நிகழ்ந்தது.

இந்த  சம்பவத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

தற்போது நான்கு அரசு மருத்துவமனைகள், ஐந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உட்பட 104 பேரின் உடல்நிலை சீராக உள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை.

வழக்கமான வார்டு அல்லது அறுவை சிகிச்சை வார்டில் மட்டுமே உள்ளனர். யாருக்கும் சுவாச உதவி வழங்கப்படவில்லை.

இருப்பினும், சில பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாம், மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டன.

செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset