நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாநில அரசு, தொடர்புடைய நிறுவனங்களுக்கு பிரதமர் உத்தரவு

புத்ராஜெயா:

சிலாங்கூர் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஜாலான் புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸில் உள்ள எரிவாயு குழாய் தீ விபத்து இடத்தில் உள்ள அனைத்து பணியாளர்களின் விவகாரங்களும், மீட்பு நிறுவனங்கள் உட்பட, எளிதாக்கப்பட வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உதவிகளை வழங்குமாறு மாநில அரசு,  சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று தனது முகநூலில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க ஒரு சுருக்கமான அறிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

முன்னதாக, சிலாங்கூர் மாநில துணை போலிஸ் தலைவர் முகமட் ஜைனி அபு ஹாசன்,

இந்த சம்பவத்தில் இதுவரை மொத்தம் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 49 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 112 பேரில், 63 பேர் தீக்காயங்கள், சுவாசப் பிரச்சினைகள், காயங்கள் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக சைபர்ஜெயா, செர்டாங் ,  புத்ராஜெயா மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset