நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்து; 112 பேர் காயம், 49 வீடுகள் சேதம், 63 பேர் 3 மருத்துவமனைகளில் சிகிச்சை: போலிஸ்

சுபாங்ஜெயா:

எரிவாயு குழாய் தீ விபத்து சம்பவத்தில் கிட்டத்தட்ட 112 குடியிருப்பாளர்கள் காயமடைந்துள்ளனர்.

சிலாங்கூர்  மாநில துணை போலிஸ் தலைவர் முகமட் ஜைனி அபு ஹாசன் இதனை உறுதிப்படுத்தினார்.

புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் எரிவாயு குழாய் தீப்பிடித்ததால் தாமான் ஹார்மோனி, கம்போங் கோல சுங்கை பாருவில் வசிக்கும் 112 பேர் காயமடைந்ததனர்.

மொத்தமாக 49 வீடுகள் இத்தீ விபத்தில் சேதமைடந்தன.

இதில்  தாமான் ஹார்மோனியில் 37 வீடுகளும், கம்போங் சுங்கை பாருவில் 12 வீடுகளும் அடங்கும்.

ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் சுகாதார அமைச்சால் திறக்கப்பட்ட தற்காலிக சிகிச்சை மையத்தில் மொத்தம் 49 பேர்  ஆரம்பக் கட்ட சிகிச்சையை பெற்றனர்.

புத்ராஜெயா, சைபர்ஜெயா, செர்டாங் மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் மொத்தம் 63 பேர் சிகிச்சை பெற்றனர்.

அதே நேரத்தில் பலத்த காயமடைந்தவர்கள் செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset