
செய்திகள் மலேசியா
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
சுபாங்ஜெயா:
புத்ரா ஹைட்ஸில் உள்ள ஜாலான் புத்ரா ஹார்மோனியில் எரிவாயு குழாய் தீப்பிடித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக சீபீல்ட், பண்டார் சௌஜனா புத்ரா இடையேயான சாலை அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது.
இதனை பிளஸ் மலேசியா பெர்ஹாட் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது.
தெற்கு நோக்கிச் செல்லும் பயனர்கள் சீபீல்ட் டோல் பிளாசாவிற்கு திருப்பி விடப்பட்டு, பண்டார் சௌஜனா புத்ரா டோல் பிளாசா வழியாக வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பில் மீண்டும் நுழைவார்கள்.
வடக்கு நோக்கிச் செல்லும் பயனர்கள் பந்தர் சௌஜனா புத்ரா டோல் பிளாசாவில் இருந்து வெளியேறி, சீபீல்ட் டோல் பிளாசா வழியாக எலிட் நெடுஞ்சாலையில் மீண்டும் நுழையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
யுஎஸ்ஜே, புத்ரா ஹைட்ஸ் டோல் பிளாசாக்கள் வழியாக எலிட் நெடுஞ்சாலையின் அனைத்து நுழைவாயில்களும் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன.
பயனர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடவும், Waze அல்லது Google Maps போன்ற வழிசெலுத்தல் பயன்பாடுகளைப் பயன்படுத்தவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 2:24 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்
April 2, 2025, 2:04 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்திலிருந்து இரண்டு நாய்கள் மீட்பு
April 2, 2025, 2:03 pm
தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி
April 2, 2025, 2:02 pm
எரிவாயு குழாய் அருகே நிலப் பணிகள் மேற்கொள்ள குத்தகையாளருக்கு அனுமதி உள்ளதா?காவல்துறை விசாரணை
April 2, 2025, 11:23 am
மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரின் உடல்களை மலேசிய மீட்புக் குழு மீட்டது
April 2, 2025, 11:22 am