
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு தீ விபத்து பகுதியில் ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம்
சுபாங்ஜெயா:
பூச்சோங்கில் உள்ள புத்ரா ஹைட்ஸ் அருகே நிலத்தடி எரிவாயு குழாய் தீப்பிடித்த பகுதியைச் சுற்றி பொதுமக்கள் ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம்.
மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்த தடையை விதித்துள்ளது.
பொதுமக்கள், மீட்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் தடுப்பதற்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த இடமும் ஒரு முக்கியமான விமானப் பாதையில் அமைந்துள்ளது.
எனவே, செயல்பாட்டில் உள்ள விமானங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இந்தத் தடை முக்கியமானது.
பொதுமக்கள் அல்லது சொத்துக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ட்ரோன் செயல்பாடுகள் உட்பட எந்தவொரு விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளும் 1969 சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டம் (சட்டம் 3) பிரிவு 4; ஒழுங்குமுறை 98, ஒழுங்குமுறைகள் 140-144, மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகள், சிவில் விமானப் போக்குவரத்து உத்தரவுகள் ஆகியவற்றிற்கு உட்பட்டவையாகும்.
மேலும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அருகிலுள்ள பகுதிகளில் வெளியேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 2:24 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்
April 2, 2025, 2:04 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்திலிருந்து இரண்டு நாய்கள் மீட்பு
April 2, 2025, 2:03 pm
தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி
April 2, 2025, 2:02 pm
எரிவாயு குழாய் அருகே நிலப் பணிகள் மேற்கொள்ள குத்தகையாளருக்கு அனுமதி உள்ளதா?காவல்துறை விசாரணை
April 2, 2025, 11:23 am
மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரின் உடல்களை மலேசிய மீட்புக் குழு மீட்டது
April 2, 2025, 11:22 am