நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்; பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு அருகே செல்ல வேண்டாம்: டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி

சுபாங்ஜெயா:

புத்ரா ஹைட்ஸ் அருகே நிகழ்ந்த  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்.

அதே வேளையில்  பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு அருகே செல்ல வேண்டாம் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

சுபாங் ஜெயா, பெட்ரோனாஸ் புத்ரா ஹைட்ஸ் பெட்ரோல் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

இன்று காலை 8:10 மணி முதல் தீயை அணைக்கும் பணியில் மொத்தம் 78 உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். அது இன்னும் தொடர்கிறது.

தீ விபத்துக்குக் காரணமான எரிவாயுக் குழாயில் கசிவு ஏற்பட்டிருந்த வால்வை பெட்ரோனாஸ் நிறுவனம் மூடியுள்ளது.

இருப்பினும், எரிவாயு குழாயில் எஞ்சியிருக்கும் எரிவாயு காரணமாக தீ இன்னும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் புத்ரா ஹைட்ஸ், ஜாலன் புத்ரா ஹார்மோனி பகுதியில் தீ அதிகமாக உயர்ந்துள்ளது.

காலை 11.00 மணி நிலவரப்படி தீயணைப்புப் படைமேற்கொண்ட வெளியேற்ற முயற்சிகள் 2 முதியவர்கள் உட்பட 7 பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளன.

மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு ஏற்கனவே புத்ரா ஹைட்ஸில் ஒரு தற்காலிக நிவாரண மையத்தைத் திறந்துள்ளது.

சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையும் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பெறத் தயாராக உள்ளது.

இந்த முயற்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், தீயணைப்பு, மீட்புத் துறையால் தீ நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் வரை பொதுமக்கள் அந்தப் பகுதியை நெருங்க வேண்டாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset