நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீ விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன: சட்டமன்ற உறுப்பினர்

சுபாங்ஜெயா:

சிலாங்கூரில் உள்ள சுபாங் ஜெயாவில் உள்ள ஜாலான் புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸ் மீது எரிவாயு குழாய் தீப்பிடித்த இடத்தைச் சுற்றியுள்ள பல வீடுகள் கடுமையான சேதத்தை சந்தித்தன.

கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் இதனை கூறினார்.

அவர் இன்று காலை சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்த்தார்.

தாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக அவர் கூறினார்.

அவர்களில் சிலர் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் மண்டபத்தில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில்  அருகிலுள்ள வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, தீ விபத்தில் பல குடியிருப்பாளர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset